தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – கால் கிலோ,
தயிர் – 100 கிராம்,
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
• வெண்டைக்காயை நீள துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி, துண்டுகளாக நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு 3 நிமிடம் வதக்கி தனியே வைக்கவும்.
• மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி… சீரகத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, இஞ்சித் துருவல், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
• வதக்கிய வெண்டைக்காய், தயிர், உப்பு சேர்த்து, மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
• சுவையான தஹி பிண்டி ரெடி.