சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சோலார் பேனல். 90 ஆயிரம் லிட்டர் டீசல் சேமிக்கலாம் என தகவல்

solar panelநாடு முழுவதும் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இந்தியன் ரயில்வேயும் தனது பங்கிற்கு சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. அதிலும் முதல்முறையாக சென்னை ரயிலில் இந்த பரிசோதனையை ரயில்வே நிர்வாகம் ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரயிலின் மேல்புறத்தில் சோலார் பேனல் பொருத்தி அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்காக சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயன்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.

இதன்படி நேற்று முன் தினம் டாக்டர் ஷீலா ராமசேஷா மற்றும் பேராசிரியர் ஜே. சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான ஆய்வு மாணவர்கள் சென்னை வந்து சதாப்தி ரயிலில் சோலார் பேனல் பொருத்துவது குறித்து ஆய்வு செய்தனர். சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 180 வாட் சக்தி கொண்ட இரண்டு சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட ஒரு சிறப்பு பெட்டியையும் அவர்கள் இணைத்தனர்.

இந்த புதிய முயற்சி குறித்து டாக்டர் ஷீலா செய்தியாளர்களிடம் கூறியபோது, “ரயில்களில் சோலார் பேனல் பயன்படுத்துவதால் ஆண்டுக்கு 90 ஆயிரம் லிட்டர் டீசலை சேமிக்கலாம் என்றும், ஓடும் ரயிலில் சோலார் பேனல் பொருத்துவதன் மூலம் எவ்வளவு மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்பதை தெரிந்துகொள்ளவே இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிவித்தார். சதாப்தி எக்ஸ்பிரஸ் அதிவேத்தில் செல்வதுடன் சில இடங்களில் மட்டுமே நிற்கும் என்பதால் இந்த ரயிலை தேர்வு செய்து சோலார் பேனலை பொருத்தியுள்ளதாகவும், இதில் தயாராகும் மின்சாரத்தின் அளவை குறிக்க ரயிலில் ஆய்வாளர்கள் ஷ்ராவந்த் வசிஸ்ட் மற்றும் வசிஷ்தா அதிமனே ஆகியோர் பயணம் செய்ததாகவும், அவர் தெரிவித்தார்.

Leave a Reply