ஆபத்தை விளைவிக்கும் கிளக்கோமா என்ற கண் நீர் அழுத்த நோய்

ef09ab61-5df3-42d7-b25a-7ee7d3de86cb_S_secvpf

சில நோய்கள் குறித்த விழிப்புணர்வு போதிய அளவு இல்லாததால் ஆபத்தான விளைவுகளை பலர் சந்திக்க நேர்கிறது. அதில் ஒன்றுதான் கண் நீர் அழுத்த நோய் எனப்படும் கிளக்கோமா. இந்த நோய் வந்தால் அதன் அறிகுறிகள் தெரியாது.

அச்சுறுத்தும் இந்த நோயை எதிர்கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.

வலி, எரிச்சல் போன்ற எந்த அறிகுறிகளும் இல்லாமல் ஆரம்ப நிலையில் இருக்கும் கிளக்கோமா என்ற கண் நீர் அழுத்த நோய், பெரும்பாலும் பாதியளவு பார்வை இழந்த பிறகே நோயாளிகளுக்கு தெரிய வருவது துயரமான ஒன்று.

 

பரம்பரை வழியாகவும், நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நோய் உலகம் முழுவதும் ஏழு கோடி பேருக்கு உள்ளதாக கூறுகிறது ஒரு புள்ளி விவரம். உலக அளவில் ஒப்பிடுகையில் அதிகமாக இந்தியாவில் மட்டும் இருபது சதவிகிதம் பேருக்கு கண் நீர் அழுத்தநோய் பாதிப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கண்புரை நோய்க்கு அடுத்ததாக அதிகம் பேரை ஆட்க்கொள்ளும் நோயும் இதுவாகவே உள்ளது.

கண்ணீர் அழுத்த நோய்க்கு மூன்று நிலைகளில் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல் இரண்டு கட்டங்களை நோயாளிகள் உணர முடியாது. கண்ணின் பக்கவாட்டு பார்வை மற்றும் கீழ் பார்வை மறையும் மூன்றாம் கட்டத்திலேயே பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களை அணுகுகின்றனர்.

கண் அலர்ஜி, தோல்வியாதி, ஆஸ்துமா, உடலுறுப்பு மாற்றம் செய்தவர்கள் மற்றும் ஸ்டீராய்டு மாத்திரைகள் அதிகம் எடுத்து கொள்பவர்களுக்கும் கண் நீர் அழுத்த நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவ பரிசோதனை மூலம் ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் முதல் மற்றும் இரண்டாம் நிலை கண்ணீர் அழுத்த நோய்க்கு மருத்துவர் பரிந்துரைக்கும் சொட்டு மருந்துகளே போதுமானது.

கண்ணின் முக்கிய பாகமான ரெட்டினாவில் இணையக்கூடிய பார்வை நரம்புகள், கண்ணீர் அழுத்த நோயால் பாதிப்படைவதால் இழந்த பார்வையை திரும்ப பெற முடியாது. உரிய நேரத்தில் எடுக்கும் சிகிச்சை மூலமே இருக்கின்ற பார்வையை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

 

Leave a Reply