பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டி இடமாற்றமா? ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு தகவல்

boxing day cricket matchஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் நாளிற்கு அடுத்த நாளான பாக்ஸிங் தினத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இவ்வருட பாக்ஸிங் டே போட்டியை மெல்போர்னுக்கு பதிலாக வேறு மைதானத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இவ்வருடம் போட்டியை நடத்த அதிக தொகைக்கு ஏலம் கேட்கும் மைதானத்தில்தான் இந்த போட்டி நடைபெறும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில்  ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர்ந்து மெல்போர்னிலேயே நடத்தப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களில் வெளியான செய்தியை முற்றிலும் மறுத்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டி மாற்றப்படலாம் என வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்றும் அப்படியொரு திட்டம் தங்களிடம் இல்லை என்றும் ‘பாக்ஸிங் டே’ போட்டி வழக்கம்போல் மெல்போர்னிலேயே தொடர்ந்து நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

Leave a Reply