மது குடிப்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

மது குடிப்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

babulal gaurபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றதில் இருந்து பாஜக முன்னணி தலைவர்களும், அமைச்சர்களும் அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி எதிர்க்கட்சிகளிடமும், பொதுமக்களிடமும் வாங்கி கட்டிக்கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றது. இந்நிலையில் பாஜக அமைச்சர் ஒருவர் மது குடிப்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்று பேசியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுவின் தீமை குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி, மதுவை அறவே ஒழிக்கும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் முயற்சித்து வரும் நிலையில், மத்திய பிரதேச மாநில அமைச்சர் பாபுலால் கவுர் என்பவர் கூறியிருப்பதாவது, “மது குடிப்பதால் குற்றம் அதிகரிக்காது. அதிகமாக மதுக் குடிப்பதால் சிலர் நினைவிழந்து விடுகின்றனர். அதனால்தான் குற்றம் நடக்கிறது. அதனால் அதிகமாக மது குடிக்காமல் அளவோடு குடித்தால் மது நல்லதுதான். 

அதே நேரத்தில் மது குடிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையாகும். தற்போது மது குடிப்பது ஒரு சமூக அந்தஸ்தாக உள்ளது’ என்று கூறியுள்ளார். இவருடைய கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இவர் ஏற்கனவே ரஷ்ய பெண் ஒருவரிடம் வேட்டியை எப்படி அவிழ்க்க வேண்டும் என்பதை சொல்லி தருகிறேன்’ என்றும், பாலியல் பலாத்காரம் ஒரு சமூகக் குற்றம். சில நேரங்களில் அது சரி. சில நேரங்களில் அது தவறு என்றும் பெண்கள் பலாத்காரம் செய்யப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய முடியாது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply