வேலூர் கோவில் கருவறையில் சுரங்கம்:பக்தர்களிடம் பெரும் பரபரப்பு!

120207-7562_JanA-WP

 வேலூர் அருகே, டைல்ஸ் ஒட்டும் பணிகள் நடந்த போது, அம்மன் கோவில் கருவறையில், சுரங்கம் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் அடுத்த, கஸ்பாவில், ஸ்ரீ ஜலகண்டேஸ்வரி எனும், வேலூர் அம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், கும்பாபிஷேகம் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கோவில் வளாகம், கருவறையில் டைல்ஸ் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இந்நிலையில், நேற்று காலை, 11 மணிக்கு, கருவறையில் டைல்ஸ் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, திடீரென, இரண்டு அடிக்கு பள்ளம் இருப்பது தெரிந்தது. அதில், விளக்கு வெளிச்சத்தில் பார்த்த போது, சுரங்கம் போல உள்ள பெரிய பள்ளம், வளைந்து செல்வது தெரியவந்தது. இந்த தகவல், வேகமாக பரவியதால், ஏராளமானோர், கோவிலுக்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். கோவில் நிர்வாகிகள் சார்பில், தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம், பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply