ரூ.300 கோடி பட்ஜெட்டில் ‘எந்திரன் 2’? ரஜினிக்கு வில்லனாக நடிக்கின்றார் அர்னால்ட்.

rajinikanth and arnoldஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் ஆரம்பகட்ட பணிகளில் தற்போது ஷங்கர் ஈடுபட்டு வருகின்றார்.

முதல்பாகத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் ஹீரோ, வில்லனாக நடித்திருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு வில்லனாக அவருக்கு சமமாக பிரபல நடிகரை நடிக்க வைக்க ஷங்கர் முடிவு செய்துள்ளார். ஷாருக்கான், கமல்ஹாசன், அஜீத் உள்பட பல பிரபல நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்திய ஷங்கர், அவர்கள் சம்மதம் தெரிவிக்காததால், தற்போது ஹாலிவுட் நடிகர் ஒருவரை நடிக்க வைக்க ஷங்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ‘ஐ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அறிமுகமாகிய அர்னால்ட் அவர்களுடன் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், எந்திரன் 2′ படத்தில் நடிக்க அர்னால்ட் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ரஜினி, அர்னால்ட், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் என பல முக்கிய பிரபலங்கள் இணைவதால் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.300 கோடியை தாண்டிவிடும் என கூறப்படுகிறது.

Leave a Reply