ராஜபக்சேவின் பிரதமர் கனவு தகர்ந்தது. பிரதமர் வேட்பாளர் குறித்து சிறிசேனா விளக்கம்.

srilankaஇலங்கையில் சுதந்திர கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக ராஜபக்சே ஒருபோதும் அறிவிக்கப்படமாட்டார் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனால் ராஜபக்சேவின் பிரதமர் கனவு தகர்ந்து போயுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில், அப்போதைய அதிபர் ராஜபக்சேவை, சிறிசேனா தோற்கடித்து புதிய அதிபராக பதவி ஏற்றார். தேர்தலில் தோல்வியுற்ற ராஜபக்சே பிரதமர் பதவியை குறிவைத்தார். ஆனால் அதிபர் சிறிசேனா, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக நியமித்தார். மேலும்  அரசியல் சட்ட சீர்திருத்தங்களையும், தேர்தல் சீர்திருத்தங்களையும் நிறைவேற்றிவிட்டு, தனது அரசின் 100வது நாளில், நாடாளுமன்றத்தை கலைத்து, புதிய தேர்தலுக்கு வழிவகுப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.

அந்த உறுதியின்படி புதிய அரசின் 100வது நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி, நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் சிறிசேனா முயன்றபோது ராஜபக்சே தரப்பில் இருந்து முட்டுக்கட்டை போடப்பட்டது. எனினும் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா ஜூன் 26ஆம் தேதி இரவு கலைத்து, அதற்கான அரசு உத்தரவிலும் கையெழுத்திட்டார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உள்ள நிலையில் அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை தற்போது கலைத்துள்ளார். இந்நிலையில் சுதந்திர கட்சியின் சார்பில் எம்.பிக்களின் விருப்பத்தின்படியே பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் கண்டிப்பாக சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராஜபக்சே அறிவிக்கப்படமாட்டார் என்றும் அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.

Leave a Reply