[carousel ids=”67413,67412″]
கடலூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் சுவாமி தங்க கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. கடலூர், திருப்பாதிரிப்புலி யூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 23ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு வீதியுலா நடந்தது. கடந்த 28ம் தேதி காலை 5:00 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை, 8:00 மணிக்கு வேதபாராயணம், 8:30 மணிக்கு நாச்சியார் திரு க்கோலத்தில் சுவாமி வீதியுலா, 11:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. மாலை 6:00 மணிக்கு யாக சாலைக்கு பெருமாள் எழுந்தருளல், 7:00 மணிக்கு தங்க கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காலை திருமஞ்சனம், இரவு துவாதச ஆராதனம், புஷ்பயாக உற்சவம், கொடியிறக்கம் நடந்தது.