தி.மு.க. திட்டம் என்றாலும் நல்ல திட்டம்தான். மெட்ரோ ரயில் குறித்து விஜயகாந்த்

[carousel ids=”67443,67444,67445,67446″]

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று காலை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்ததை அடுத்து தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களும் பயணம் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வரை பயணம் செய்த விஜயகாந்த் பயணிகளுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு அவர்களுடன் ஜாலியாக பேசியபடியே பயணம் செய்தார். பயணிகளின் குறைகளை கேட்ட விஜயகாந்த், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தன்னால் முடிந்ததை செய்து தருவதாக கூறினார்.

மேலும் அவர் கோயம்பேடு வந்து இறங்கியவுடன் செய்திகளுக்கு பேட்டியளித்தார். சென்னை மெட்ரோ ரயில் நல்ல பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு மிகவும் வசதியாக உள்ளது. இருப்பினும் மற்ற மாநிலங்களை விட கட்டணம் மிக அதிகமாக இருப்பதால் தமிழக அரசு உடனே கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறியதாவது: மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதனால் வந்தேன். மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ததில் திருப்தி அடைந்தேன்.  இது தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்றாலும் நல்ல திட்டம்தான். இதில் பொது மக்களின் வசதிக்கேற்ப அரசு இன்னும் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மத்திய மந்திரி வெங்கைய நாயுடுவை இந்த விழாவுக்கு அழைத்திருக்கலாம். ஆனால் அழைக்கவில்லை என்று கூறினார்.

Leave a Reply