மேகி நூடுல்ஸ் உடலுக்கு பாதுகாப்பானது. இங்கிலாந்து தர கட்டுப்பாட்டு மையம் நற்சான்றிதழ்

மேகி நூடுல்ஸ் உடலுக்கு பாதுகாப்பானது. இங்கிலாந்து தர கட்டுப்பாட்டு மையம் நற்சான்றிதழ்

maggiதமிழகம் உள்பட இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்கள் மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளுக்கு தடை விதித்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மேகி நூடுல்ஸை ஏற்றுமதி செய்ய மும்பை நீதிமன்றம் அனுமதித்தது. இந்நிலையில் இந்தியாவில் தயாராகும் மேகி நூடுல்ஸ் உடலுக்கு எந்தவித தீங்கையும் விளைவிக்காது. அந்த உணவு ஆரோக்கியமானது என்று இங்கிலாந்து உணவு பாதுகாப்பு முகமை (Food Safety Agency)  தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேகி நூடுல்ஸ் உணவுப்பொருள் குறித்த சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து, இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மேகி நுடுல்ஸ் உணவுப்பொருட்களை ஆய்வுக்குட்படுத்த இங்கிலாந்து உணவு பாதுகாப்பு முகமை முடிவு செய்தது. இந்நிலையில் இந்த ஆய்வின் முடிவு நேற்று வெளியானது. இந்த ஆய்வில் மேகி நூடுல்ஸ் உண்பதற்கு முற்றிலும் பாதுகாப்பானது என்று கூறியுள்ள அந்த அமைப்பு மேகி நூடுல்சுக்கு நற்சான்றிதழும் வழங்கியுள்ளது.

இதேபோன்று, வியட்நாம் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானதுதான் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply