அமர்நாத் புனித யாத்திரையை, ஜம்மு – காஷ்மீர் மாநில அமைச்சர்கள் லால் சிங், சுக்நந்தன் சவுத்ரி, பிரியா சேதி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதுகுறித்து, ஜம்மு கூடுதல் துணை கமிஷனர் மற்றும் அமர்நாத் யாத்திரை அதிகாரி டாக்டர் பியுஷ், ஜம்முவில் நிருபர்களிடம் கூறியதாவது:ஜம்முவில் பகவதி நகர் முகாமிலிருந்து, முதற்கட்டமாக, 1,280 பக்தர்கள் அமர்நாத்துக்கு புனித பயணம் துவக்கி உள்ளனர். இக்குழுவில், 919 ஆண்கள், 191 பெண்கள், 16 குழந்தைகள், 154 சாதுக்கள் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு டாக்டர் பியுஷ் கூறினார்.