ஜெர்மனி: பிரபல கார் நிறுவனத்தின் ஊழியரை அடித்து கொலை செய்த ரோபோ. திடுக்கிடும் தகவல்

roboஜெர்மனியில் இயங்கி வரும் பிரபல கார் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர் ஒருவரை அங்கிருந்த ரோபோ ஒன்று நசுக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மன்  நாட்டின் ஃப்ராங்ஃப்ரூட் என்ற நகரில் இயங்கி வரும் ஃபோக்ஸ்வேகன் என்ற கார் நிறுவத்தின் தலைமை உற்பத்தி ஆலையில் 22 வயதுமிக்க ஊழியர் ஒருவர் மிகவும் மும்முரமாக பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அவர் அருகில் இருந்த ரோபோ திடீரென அந்த வாலிபரை இழுத்து பெரிய தகடு மீது தள்ளி நசுக்கியே கொலை செய்ததாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஹில்விக் என்பவர் கூறியுள்ளார். ரோபோவின் செயல்பாடுகள் திடீரென மாறுவதற்கு அதற்கு அளிக்கப்பட்ட தவறான வழிமுறை குறிப்புகளே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் நடந்தபோது அந்த ஊழியருடன் மற்றொரு ஊழியரும் இருந்ததாகவும், அவருக்கு ரோபாவால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் ஹில்விக் கூறியுள்ளார். ஆனால் சம்பவம் குறித்து கார் நிறுவனம் ஒருசில தகவல்களை வெளியிடாமல் மறைப்பதாக சக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

இது குறித்து யார் மீது வழக்கு பதிவு செய்வது என்று ஜெர்மன் அரசு தரப்பு சட்ட நிபுணர்கள் ஆலோசித்து வருவதாக டிபிஏ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply