உங்கள் அபிமான இணையதளங்களில் புதிய தகவல்கள் இடம்பெறும் போதெல்லாம் தகவல் சொல்லும் கண்காணிப்பு சேவை இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அடிக்கடி நாம் செல்லும் தளங்களில் ஏற்படும் மாற்றங்களை அந்தத் தளங்களுக்குச் செல்லாமலே தெரிந்துகொள்ள இவை உதவுகின்றன. இப்போது ஆண்ட்ராய்டு போன்களுக்கு இதே வசதியைக் கொண்டுவந்திருக்கிறது வெப் அலர்ட் செயலி.
இந்தச் செயலியை டவுன்லோடு செய்துகொண்ட பின், நாம் பின்தொடர விரும்பும் இணையதள முகவரியை இதில் குறிப்பிட்டு அந்தத் தளத்தில் எந்தப் பகுதியைக் கண்காணித்துத் தகவல் சொல்ல வேண்டும் எனத் தெரிவித்தால் போதும் அதன் பிறகு அந்தத் தளம் அப்டேட் ஆகும்போதெல்லாம் தகவல் தெரிவித்து எச்சரிக்கை செய்யும்.
இகாமர்ஸ் தளங்களில் பொருட்களின் விலை மீது ஒரு கண் வைத்திருப்பதில் தொடங்கி புதிய கட்டுரைகள் பதிவேற்றப்படுவதைத் தெரிந்துகொள்வதுவரை பலவிதங்களில் இதைப் பயன்படுத்தலாம்.
ஆண்ட்ராய்டில் டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=me.webalert&hl=en