‘புலி’ படத்திற்கு பின்னர் விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்தில் பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் வில்லனாக நடித்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளன.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 1ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, ராதிகா, மகேந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். சத்ரியன் படத்தின் ரீமேக்தான் இந்த படம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், சத்ரியன் திரைப்படத்தில் திலகன் நடித்த கேரக்டரில் மகேந்திரன் நடித்து வருவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். தற்போது சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக ‘விஜய் 59’ வெளிநாடு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.