சாத்தூர் வெங்கடாஜலபதி கோயில் ஆனித்திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். இக்கோயில் ஆனித்திருவிழா கடந்த ஜூன் 24ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. பெருமாள் சுவாமி, ஸ்ரீதேவி,பூதேவி சமேதரராய் காலை 8 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளகாலை 10.45 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. நான்கு ரதவீதி வழியாக வலம் வந்த தேர் பிற்பகல் 2மணிக்கு நிலைக்கு வந்தது . சாத்தூர் மற்றும் சுற்றுக் கிமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். சாத்துர் டி.எஸ்.பி., குமார் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.