லாரன்ஸ் தம்பிக்கு ஜோடியாக நடிக்க மறுத்த காஜல் அகர்வால்

kajalதமிழில் விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடனும் தெலுங்கில் மகேஷ்பாபு, ராம்சரண் தேஜா, போன்ற முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால் பிரபல இயக்குனர் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

காஞ்சனா 2′ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிய லாரன்ஸ் சகோதரர் எல்வின், கதாநாயகனாக ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில் எல்வினுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை படக்குழுவினர் அணுகியதாகவும், இந்த படத்திற்கு ரூ.2 கோடி சம்பளம் தர படக்குழுவினர் முன்வந்தும் அதற்கு காஜல் அகர்வால் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும், அறிமுக நாயகர்களுடன் நடிப்பதில்லை என்றும் அவர் கூறியதாக தெரிகிறது. இதனால் படக்குழுவினர் எல்வினுக்கு ஜோடியாக நடிக்க புதுமுக நடிகையை தேடி வருகின்றனர்.

தற்போது காஜல் அகர்வால் தனுஷ் ஜோடியாக ‘மாரி’ படத்திலும், விஷால் ஜோடியாக ‘பாயும்புலி’ படத்திலும் மகேஷ்பாபு ஜோடியாக பிரமோத்சவம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

Leave a Reply