வீடு… எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் மீண்டும் மீண்டும் அசுத்தமடைவது வாடிக்கை. அதிலும் தரையை சுத்தப்படுத்துவது பெண்களுக்கு மிகுந்த சிரமத்தையும் எரிச்சலையும் தரக்கூடியது. இதைதடுக்க என்ன தான் பல்வேறு பொருட்கள் மார்க்கெட்களில் கிடைத்தாலும் அவை அனைத்தும் மனித உழைப்பையும் சேர்த்தே இயங்கக் கூடியதாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக புதிய ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
ஊதாக் கதிர்களின் (UV Light) மூலம் பிறப்பிக்கப்படும் ஒளியின் ஊடாக தரைகள் போன்றவற்றினை சுத்தம் செய்யக் கூடிய சிறிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சமையல் அறைக்கு மிகவும் பொருத்தமானதாகக்காணப்படும் இதனை THAT எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஒரு சிடியின் அளவே உடைய இந்த ரோபோவானது உணவுகளைத் தயாரிக்கும் போது தரையில் சிந்திய ரசாயனப் பொருட்களையும் இலகுவாக சுத்தம் செய்துவிடும் ஆற்றல் உடையது. தற்போது இந்த ரோபோ நிதி திரட்டல் நோக்கத்தில் Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.