சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுமார்150,000 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி சரித்திர சாதனை படைத்தார். இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக சென்னை கோட்டையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
எம்.எல்.ஏ. பதவியேற்பு உள்ளிட்ட ஒருசில நிகழ்ச்சிகளை முடித்த பின்னர் முதல்வர் ஜெயலலிதா ஓய்வு எடுப்பதற்காக நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் தற்போது அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டதாகவும், கொடநாடு பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தலைமைச் செயலக வட்டாரச் செய்திகள் கூறுகின்றன.