முதல்வர் ஜெயலலிதா விரைவில் பதவியிழப்பார். சமூக சேவகி மேதா பட்கர் எச்சரிக்கை.

medhaஏழைகளை பாதிக்கும் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு கொடுத்தால் ஜெயலலிதா தனது பதவியை இழக்கவேண்டிய நிலை வரும்’ என சமூக ஆர்வலர் மேதா பட்கர் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக சமூக சேவகி மேதாபட்கர் பல போராட்டங்களை நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று சென்னை வந்த மேதாபட்கர், தமிழக கவர்னர் ரோசைய்யாவை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், ”தமிழகத்தில் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருந்து நிலங்கள் அதிக அளவில் அரசால் கையகப்படுத்தப்படுகிறது. அந்த நிலங்கள் எதற்கும் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. இதனால், விவசாயம் உள்ளிட்ட பணிகள் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேதா பட்கரின் மனுவை பெற்றுக் கொண்ட கவர்னர் ரோசய்யா, இது குறித்து விளக்கம் கேட்டு முதல்வருக்கு கடிதம் எழுதப்படும்’ என்று கூறியுள்ளார்.

கவர்னரிடம் மனுவை கொடுத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேதாபட்கர், ‘மத்திய அரசின் ‘நிலம் கையகப்படுத்தும் சட்டம், மக்கள் நலனுக்கும், தேச நலனுக்கும் எதிரானது. அது, பெரும் முதலாளிகளுக்கு ஆதரவானது. இதை எதிர்த்து வருகின்ற 23 ஆம் தேதி டெல்லியில் மாபெரும் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த சட்டத்திற்கு ஆதரவு கொடுத்தால் அவர் விரைவில் தனது பதவியை இழப்பார். மேலும், மற்ற மாநில முதல்வர்களை போல தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சாதாரணமாக சந்திக்க முடியவில்லை” என்று கூறினார்

Leave a Reply