தரக்குறைவான வார்த்தைகளால் டுவிட் செய்த லலித் மோடி மீது ஜனாதிபதி மாளிகை புகார்

தரக்குறைவான வார்த்தைகளால் டுவிட் செய்த லலித் மோடி மீது ஜனாதிபதி மாளிகை புகார்

lalit-omitaபாரதிய ஜனதா கட்சி அமைச்சர்கள் மற்றும் சோனியா காந்தியினர் குடும்பத்தினர் என வரிசையாக பிரபலங்களை குறிவைத்தே டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இந்திய அரசியலில் பெரும் பரபரப்புகளை ஏற்படுத்தி வந்த லலிதமோடி, தற்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குறித்தும் சர்ச்சைக்கருத்து ஒன்றை தெரிவித்துள்ளால், ஜனாதிபதி மாளிகை லலித்மோடி மீது டெல்லி போலீஸில் புகார் செய்துள்ளது.

ஐ.பி.எல் போட்டியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டு இந்தியாவில் இருந்து தப்பி, லண்டனில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் லலித்மோடி, அவ்வப்போது டுவிட்டரில் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் அவரது செயலாளர் ஒமிதா பால் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தரக்குறைவான வார்த்தைகளால் ஒருசில கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து குடியரசுத் தலைவரின் அலுவலகத்திலிருந்து டெல்லி காவல் துறை ஆணையர் பி.எஸ்.பாஸ் அவர்களுக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துட்ன, கடந்த ஜூன் 23, 25 தேதிகளில் லலித் மோடி டுவிட்டரில் தெரிவித்த கருத்துகளின் ஸ்கிரீன் ஷாட் மற்றும் லலித் மோடிக்கு எதிரான அமலாக்கத் துறை விசாரணை தொடர்பான 80 பக்க ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர், அவரது செயலாளர் மற்றும் பிரணாப் நிதியமைச்சராக இருந்தபோது பயனடைந்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் விவேக் நாக்பால் ஆகியோரின் புகைப்படம் அடங்கிய ஆவணமும் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை ஆணையர், டெல்லி போலீஸின் பொருளாதார குற்றப் பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும்  லலித் மோடியின் ட்விட்டர் பக்கத்தை தடை செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் விளக்கம் கோரலாமா என்பது குறித்தும் டெல்லி போலீஸ் ஆலோசித்து வருகிறது.

Leave a Reply