ரஷ்யா உள்பட ஆறு நாடுகளுக்கு மீண்டும் சுற்றுப்பயணம் செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி மீண்டும் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம். ரஷ்யா உள்பட ஆறு நாடுகளுக்கு செல்கிறார்

modiஇந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திரமோடி, கடந்த ஒரு வருடத்தில் அமெரிக்கா, சீனா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா உள்பட மொத்தம் 18 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் இன்று முதல்  ரஷ்யா, கஜகஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து கிளம்புகிறார்.

இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு செல்லும் பிரதமர் முதலில் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு செல்கிறார். இன்றும் நாளையும் உஸ்பெகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் அவர் அதன்பின்னர்  2 நாள் பயணமாக கஜகஸ்தான் செல்கிறார். அங்கு 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் அங்கு தங்கியிருப்பார். கஜகஸ்தானை அடுத்து வரும் 9ஆம் தேதி ரஷ்யாவுக்கு செல்லும் பிரதமர், அங்கு உபா நகரில் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டின்போது பிரதமர் பல்வேறு நாடுகளின் தலைவர்களை மோஇட் சந்தித்து பேச உள்ளார். பின்னர், அங்கிருந்து துர்க்மெனிஸ்தான் செல்லும் மோடி, 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் அங்கு தங்கி இருப்பார். அதன்பிறகு, 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கிர்கிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யும் அவர் பயணத்தின் நிறைவு கட்டமாக 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் தஜிகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

பிரதமரின் இந்த பயணத்தின்போது, மத்திய ஆசிய நாடுகள் அனைத்திலும், ராணுவம், பயிற்சி அளித்தல், திறன்வளர்த்தல், கலாசாரம், சுற்றுலா போன்ற துறைகளில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply