கொடி வகையைச் சார்ந்த சௌசௌ குளிர்மண்டலப் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதன் இலைகள் பெரியதாக பிளவுபட்டுக் காணப்படும். இளம் காய்கள் பௌர் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இதன் விதைகள் காய்களின் உட்புறம் இருக்கும். முற்றிய விகைகளை பயிரிட பயன்படுத்தலாம்.
உயர் ரத்த அழுத்தம், புற்றுநோயை தடுக்க, தைராய்டு கோளாரால் அவதிபடுபவர்களுக்கும், கொழுப்புகளை குறைக்கவும் சிறந்தது.
100 கிராம் சௌசௌவில காணப்படும் ஊட்டப் பொருள்கள்:
வைட்டமின்கள் – ஏ, பி1, சி,கே, கார்போஸைட்ரேட் – 17.8 %, போலேட் சத்து – 10.5 %, புரதச் சத்து – 5.4 %, சுண்ணாம்புச் சத்து – 6.7 %, பாஸ்பரஸ் – 4.8%, மாங்கனீசு – 9 %, காப்பர் – 6 %, பொட்டாசியம் – 3 %, மக்னீசியம் – 4 %, நார்ச்சத்து – 1.4 %, இரும்புச்சத்து – 2.5 %. அஜீரணக் கோளாறுகளினால் அவதிப்படுபவர்கள், சௌசௌவை அன்றாட உணவில் பயன்படுத்தி வர விரைவில் உணவு ஜீரணமாகும்.
சௌசௌ நீர்ச்சத்து மிக்க காய். ஆதலால் சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும். மேலும், சிறுநீர் சம்பந்தமான நோய்களிலிருந்தும் உடலை பாதுகாக்கும். உடல் வளம் பெற உண்ணும் உணவில் சௌசௌ அவசியமாகும். இதில் உள்ள வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாக்கும்.
நரம்பு தளர்ச்சியை நீக்கி நரம்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. வயிறு சம்மந்தமான நோய்களை நீக்கி வயிற்றை சுத்தப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு.
உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைக்கும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை உண்ணும் உணவில் இதை பயன்படுத்தி வர மலச்சிக்கல் நீங்கும். பெருங்குடல் மற்றும் சிறுகுடல் சம்மந்தமான நோய்களை நீக்கி குடல் பாதைகளை சுத்தப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
கர்ப்பிணிகளுக்கு கை, கால்களில் வீக்கம் காணப்படும். இவர்கள் நீர்ச்சத்து மிகுந்த காயான சௌசௌவை பயன்படுத்தி வர வீக்கங்கள் குறையும். மேலும், இதில் காணப்படும் அபரிதமான சத்துக்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையை பல்வேறு நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. சௌசௌவில் காணப்படும் காப்பர், மக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் தைராய்டு நோயால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும்.
இதை உண்ணும் உணவில் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். சௌசௌவில் காணப்படும் கால்சியம் மற்றும் வைட்டமின்-கே போன்ற சத்துக்கள் எலும்புகளை வலுப்பெறச் செய்யும். எனவே குழந்தைகள் உண்ணும் உணவுடன் இக்காயை சேர்த்து பயன்படுத்தி வர எலும்பு சம்மந்தமான நோய்களிலிருந்து குழந்தைகளை காக்கும். மேலும், குழந்தைகளை சுறுசுறுப்புடன் இயங்கச் செய்யும். வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் அதிக கொழுப்பு சேர்த்து அவதிப்படுவர்களுக்கு சௌசௌ சூப் நல்ல பலன் கொடுக்கும்.