இந்திய பொருளாதாரத்துடன் இந்தி மொழியும் வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி

இந்திய பொருளாதாரத்துடன் இந்தி மொழியும் வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி

modiஇந்திய நாடு பொருளாதாரத்தில் மிக வேகமாக முன்னேற்றம் காணும்போது, இந்தி மொழியின் முக்கியத்துவமும் உயர்ந்து கொண்டே வருகிறது என உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஆறு நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக நேற்று டெல்லியில் இருந்து உஸ்பெகிஸ்தான் சென்ற இந்திய பிரதமர் மோடி, இந்தி மொழி மாணவர்கள் மற்றும் இந்திய சமூகத்தினரிடையே பேசியதாவது:வன்முறையில் இருந்து தள்ளி நிற்க, இசை ஒரு சிறந்த கருவி’ என்னும் உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோவ்வின் கருத்தை ஆமோதிக்கிறேன்.

மனிதர்களுக்கு இடையிலான தனிமனித உரையாடல்களே, நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுக்கு வழிவகுக்கும். இதில் மொழியும் கலாச்சாரமும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மக்கள் தங்களின் மொழியை விரும்பிக் கற்றுக்கொள்ளும் பட்சத்தில், எங்கெல்லாம் பொருளாதாரம் வலிமையாக இருக்கிறதோ, அங்கெல்லாம் மொழியின் சிறகுகள் பரந்து விரிகின்றன. பொருளாதாரத்தில் அதிவேகமாக வளர்ச்சி காணும் நாடுகளின் மொழியைக் கற்றுக்கொள்ள உலக மக்கள் ஆர்வம் காட்டுவர். அந்த வகையில், இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேற்றம் காணும்போது, இந்தி மொழியின் முக்கியத்துவமும் உயர்ந்து வருகிறது.

மொழி ஒரு சகாப்தத்தின் உணர்வுகளையே தன்னுள் ஈர்த்து வைத்திருக்கிறது. ஒருவரின் ஆளுமையில் மொழி முக்கியப் பங்காற்றுகிறது.

இந்தியப் படங்களும், இசையும், மொழியும் உஸ்பெகிஸ்தானில் மிகவும் பிரபலம். 2012-ல், உஸ்பெக் ரேடியோ, தனது 50-வது ஆண்டு இந்தி ஒளிபரப்பை நிறைவு செய்தது” என்று மோடி பேசினார்.

உஸ்பெக் மற்றும் இந்திய மொழிபெயர்ப்பாளர்கள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முதல் உஸ்பெக் – இந்தி அகராதியை மோடி வெளியிட்டார்

Leave a Reply