பிரபல ஆங்கில இணையதளம் ஒன்று தங்க மெடல் பரிசு வழங்குவதற்காக சிறந்த நடிகர் மற்றும் நடிகையை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.
சிறந்த நடிகர்கள் பட்டியலில் விஜய், அஜீத், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனும், நடிகைகள் பட்டியலில் சமந்தா, ஹன்சிகா, அமலாபால் மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர்களையும் இந்த ஆங்கில இணையதளம் போட்டியில் சேர்த்துள்ளது.
வாக்கெடுப்புகள் இன்னும் சில நாட்களில் முடியவுள்ள நிலையில் விஜய்-அஜீத் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இப்போதைய நிலையில் அஜீத்தை விட விஜய் 1586 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கின்றார். விஜய்க்கு 57,993 வாக்குகளூம், அஜீத்துக்கு 56,407 வாக்குகளூம், தனுஷுக்கு 3,316 வாக்குகளும், சிவகார்த்திகேயனுக்கு 1,375 வாக்குகளும் கிடைத்துள்ளது.
நடிகைகளில் சமந்தா வெற்றி பெறும் நிலையில் உள்ளார். அவருக்கு 18,162 வாக்குகளும், அவருக்கு அடுத்தபடியாக உள்ள ஹன்சிகாவுக்கு 6,762 வாக்குகளூம், அமலாபாலுக்கு 3,826 வாக்குகளும், லட்சுமி மேனனுக்கு 2,960 வாக்குகளும் கிடைத்துள்ளது.
இன்னும் இரண்டொரு நாளில் இந்த இணையதளம் தங்க மெடல் வாங்கும் நடிகர், நடிகை யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது. அஜீத், விஜய் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாக்களித்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.