உலகிலேயே இந்திய ரூபாய் நோட்டுக்களில்தான் நோய்க்கிருமிகள் அதிகம். அதிர்ச்சி ஆய்வு முடிவு.

currenciesஉலகம் முழுவதும் பொதுமக்கள் ஒருவருடன் ஒருவர் அதிகளவில் பரிமாறிக் கொள்ளப்படும் ரூபாய் நோட்டுகளில் அதிக அளவில் நோய்க்கிருமி கடத்திகள் இருப்பதாக வெளிவந்த ஒரு தகவலின் அடிப்படையில் அனைத்து நாடுகளில் கரன்ஸிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டதில் இந்திய ரூபாய் நோட்டுகளில்தான் அதிகளவில் நோய்க்கிருமிகள் இருப்பதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையை தொடர்ந்து மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு மையத்தின் கீழ் இயங்கும் `இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஜினோமிக்ஸ் அண்ட் இன்டக்ரேட்டிவ் பயாலஜி’ என்ற மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்காக `ஷாட்கன் மெட்டாஜினோம் சீக்வென்சிங்’ என்னும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த ஆய்வின் மூலம் இந்திய ரூபாய் நோட்டுக்களீல் சுமார் 78 நோய்க் கிருமிகளும், 18 வகையான ஆன்டிபயாடிக் எதிர்ப்புக் கிருமிகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆய்வின் முடிவுகள் `ப்ளஸ் ஒன்’ என்னும் பிரபல மருத்துவ அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. `இந்த நோய்க் கிருமிகளில் 70% யூகார் யோட்டா (மெய்க்கருவுயிரி), 9 சத வீதம் பாக்டீரியா மற்றும் 1 % வைரஸ் ஆகியவை இருக்கின்றன’ என்றும் அந்த இதழ் கூறியுள்ளது. .

இந்திய ரூபாய் நோட்டுகள் கடினத்தன்மையுடன் இருப்பதால்தான் அவற்றில் நோய்க்கிருமிகள் நீண்ட நாட்கள் வாழுகின்றன என்றும் மேலும் ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவில்தான் அதிகளவு மக்களால் கைமாறுகின்றன என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆய்வில் பாலஸ்தீன ரூபாய் நோட்டுகளில் 96.25 % நோய்க்கிருமிகளும், கொலம்பியா நாட்டு ரூபாய் நோட்டு களில் 91.1%, தென்னாப்பிரிக்கா ரூபாய் நோட்டுகளில் 90 %, சவுதி ரூபாய் நோட்டுகளில் 88% மற்றும் மெக்சிகோ ரூபாய் நோட்டுகளில் 69% நோய்க்கிருமிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் வங்கிகள், மருத்துவமனை ஆகிய இடங்களில் கையாளும் ரூபாய் நோட்டுகளில் அதிகளவு நோய்க் கிருமிகள் இருப்பதாகவும், அதற்கடுத்து இறைச்சி விற்பனையாளர்கள் கையாளும் ரூபாய் நோட்டுகளில் கிருமிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply