இப்தார் உணவில் விஷம்? 45 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி. பெரும் பரபரப்பு

iftarஇஸ்லாமியர்களின் புனித நாளான ரம்ஜான் திருநாள் நெருங்குவதை அடுத்து தற்போது ஆங்காங்கே இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் ஈராக் நாட்டில் மொசோல் என்ற பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கலந்து கொண்ட ஒரு இப்தார் நோன்பு விருந்தில் பரிமாறப்பட்ட உணவில் விஷம் கலந்து இருந்ததால் 45 பேர் பலியானதாகவும், 100 பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈராக் நாட்டின் மொசோல் என்ற நகரில் நேற்று நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் 145 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கலந்து கொண்டனர். கையில் துப்பாக்கியுடன் இந்த நிகழ்ச்சிக்கு வந்த இவர்கள், மகிழ்ச்சியுடன் அங்கு பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போதுதான் அவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது.

இதன் பின்னர் பாதிக்கப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 45 பேர் பலியாகிவிட்டதாகவும், 100 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகளை கொல்லும் நோக்கத்துடன் யாராவது உணவில் விஷம் கலந்தார்களா? அல்லது புட் பாய்சன் ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply