பாலக் சிக்கன்

download (5)

தேவையான பொருட்கள் :

பாலக்கீரை – 1 கட்டு
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 300 கிராம்
தக்காளி – 200 கிராம்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் –  3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

• வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

• பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.

• வெங்காயம், தக்காளி, இஞ்சி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பூண்டு விழுது ஆகியவற்றை வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூளுடள் சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

• அடுத்து அதில் பாலக்கீரையை சேர்த்து வதக்கவும்.

• இத்துடன் சுத்தம் செய்து நறுக்கிய சிக்கனையும் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.

• தேவையானால் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம்.

• சிக்கன், கீரை மசாலாவுடன் சேர்ந்து வெந்து தொக்கு பதத்தில் வந்ததும் இறக்கி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

• இது டிபன் மற்றும் சாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

Leave a Reply