பெரும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ள எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலி’ படத்திற்கு அதிகளவு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தை முதல் காட்சி பார்த்து கொண்டிருக்கும் பலர் டுவிட்டரில் நெகட்டிவ் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த படத்தின் டீசர், டிரைலர், மற்றும் விளம்பரங்கள் ஏற்படுத்தியதாகவும், ஆனால் படம் தாங்கள் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும் கருத்துக்கள் வெளிவந்துள்ளது. ஒருசிலர் பாசிட்டிவ் கருத்துக்களையும், ஒருசிலர் படம் ஆவரேஜ் ஆக இருப்பதாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்ரனர்.
இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்று பாகுபலி படத்தை கூறுவது முட்டாள்தனம் என்றும் படத்தில் பிரமாண்டம் அந்த அளவுக்கு இல்லை என்று ஒருவர் டுவீட் செய்துள்ளார். இன்னொருவர் பாகுபலி படத்தை பார்த்து பணத்தையும் நேரத்தையும் வீணாக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். பலர் இந்த படத்திற்கு இரண்டு ஸ்டார்கள் மட்டுமே கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த கருத்துக்கள் உண்மையானது அல்ல. பாகுபலி படத்திற்கு எதிராக சதி செய்பவர்களின் விமர்சனம் என்றும் படம் உண்மையிலேயே சூப்பராக உள்ளதாகவும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது. பிரபல இணையதளம் ஒன்று பாகுபலி படத்திற்கு 4.25 ஸ்டார் கொடுத்து கெளரவப்படுத்தியுள்ளது. எது எப்படியோ இன்னும் சில மணி நேரங்களில் இந்த படத்தின் உண்மையான ரிசல்ட் தெரிந்துவிடும்