ஐ.எஸ்.ஐ.எஸ் கழுத்தை அறுத்து தண்டனை கொடுத்த நைஜீரிய தீவிரவாதிகள்

[carousel ids=”68011,68012,68013″]

ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.ஐ தீவிரவாதிகள் அவ்வப்போது தங்களது எதிரிகளையும், பணயக்கைதிகளாக சிக்குபவர்களையும் கழுத்தை அறுத்து கொலை செய்யும் அதிர்ச்சிக்காட்சிகள் வீடியோ வடிவில் வெளிவந்துள்ளது. இந்நிலையில் நைஜீரிய நாட்டின் தீவிரவாதிகளான போகோஹராம் உறுப்பினர்கள் நேற்று முதல்முறையாக ஒருவரை கழுத்தை அறுத்து தண்டனை கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ நைஜீரிய நாட்டு அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆப்பிரிக்க யூனியன் படைவீரர் ஒருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த போகோஹராம் தீவிரவாதிகள், தங்கள் இயக்கத்திற்கு எதிரானவர்களுக்கு இதுபோல் தொடர்ந்து அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறினர். பத்து நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ முகத்தை துணியால் மறைத்து கொண்ட மூன்று தீவிரவாதிகளும், படைவீரர் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

தலைவெட்டப்பட்டு உடல் மட்டும் தரையில் விழுவதுடன் இந்த வீடியோ முடிகிறது. இந்த வீடியோ நைஜீரிய நாட்டு அரசு உயரதிகாரிகளையும், ராணுவத்தினர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. போகோஹராம் தீவிரவாத அமைப்புக்கு எதிரான அரசின் நடவடிக்கை தொடரும் என்றும், இதுபோன்ற வீடியோக்களால், தங்களது தீவிரவாத வேட்டையை தடுத்துவிட முடியாது என்றும் நைஜீரிய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply