ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி

download (7)

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1 கிலோ

பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)

கொத்தமல்லி – 1 கப் (நறுக்கியது)

புதினா – 1 கப்

குங்குமப்பூ – 1 டீஸ்பூன்

பால் – 1/2 கப்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்

சிக்கன் ஊற வைப்பதற்கு..

 பச்சை மிளகாய் – 4 (அரைத்தது)

இஞ்சி பூண்டூ பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்

தயிர் . 1/2 கப்

சீரகம் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

பட்டை – 2

கிராம்பு – 3

ஏலக்காய் -2

புதினா – 1/2 கப்

கொத்தமல்லி – 1/2 கப்

சாதம் செய்வதற்கு…

பாஸ்மதி அரிசி – 2 கப்

பிரியாணி இலை – 1

பட்டை – 1

கிராம்பு – 2

அன்னாசிப்பூ – 1

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரிசியை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் கொத்தமல்லி மற்றும் புதினா தவிர்த்து, இதர பொருட்களை போட்டு வறுத்துக் கொண்டு, பின் அதனை குளிரை வைக்க வேண்டும். வறுத்த பொருட்கள் குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து, இறுதியில் கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து ஓரளவு அரைக்க வேண்டும். பின் சிக்கனை எடுத்துக் கொண்டு, அதில் சிக்கன் ஊற வைப்பதற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து, பிரட்டி 3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் அன்னாசிப்பூ சேர்த்து தாளித்து, அரிசிக்கு வேண்டிய தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், ஊற வைத்து கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் உப்பைப் போட்டு, மூடி வைத்து, அரிசியை பாதியாக வேக வைத்து, இறக்கி விட வேண்டும். அடுத்து பாலில் குங்குமப்பூவை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, தனியாக வைக்க வேண்டும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தாராளமாக எண்ணெய் ஊற்றி, ஊற வைத்துள்ள சிக்கனைப் போட்டு, நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் பாதியாக வேக வைத்துள்ள சாதத்தை போட்டு, அதன் மேல் மீதமுள்ள நெய் ஊற்றி, பின்பு பொன்னிறமாக வதக்கிய வெங்காயம், கொத்தமல்லி, புதினா மற்றும் குங்குமப்பூ பால் சேர்த்து, காற்று புகாதவாறு நன்கு மூடி, தீயை குறைவில் வைத்து, 20-30 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும். இப்போது சுவையான ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி ரெடி!!!

Leave a Reply