குரூப் 1 தேர்வு: இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு

tnpsc_exam_2103

குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம், இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிடவுள்ளது.

துணை ஆட்சியர் பணியிடங்கள்-19, போலீஸ் துணை சூப்பிரண்டு பணியிடங்கள் -26, உதவி வணிக வரி அலுவலர்கள் பணியிடங்கள் -21, மாவட்ட பதிவாளர்கள் பணியிடங்கள்- 8 ஆகிய 74 உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்தத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வாணைய இணையதளத்திலேயே www.tnpsc.gov.in விண்ணப்பம் செய்யலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 9-ம் தேதி கடைசி நாளாகும்.

குரூப் 1 தேர்வினை எழுத இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லூரிக் கல்வி என்ற நிலைகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும் என தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 3 அல்லது 4 ஆம் ஆண்டு பட்டப்படிப்புக்கான இறுதி தேர்வு எழுதிவிட்டு சான்றிதழுக்காக காத்திருப்போரும் இந்த தேர்வை எழுதலாம். இந்த தேர்வுக்கு பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இந்த தேர்வு முதல் நிலை தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய 3 கட்டங்களாக இந்த தேர்வு நடைபெறும். ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மறுதேர்வுக்கு செல்லமுடியும். துணை ஆட்சியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில வருடங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக முடியும். அதுபோல துணை சூப்பிரண்டு பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில ஆண்டுகள் கழித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி. ஆக முடியும்.

முதல் நிலை தேர்வு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் 33 மையங்களில் நடக்க உள்ளது என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Leave a Reply