மறைந்த இங்கிலாந்து நாட்டின் முன்னாள் ராணி விக்டோரியா ரெஜினா அவர்களின் 125 ஆண்டுகள் பழமையான உள்ளாடை ஒன்று இந்திய மதிப்பில் சுமார் ரூ. 11 லட்சத்திற்கு ஏலம் போனதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
இங்கிலாந்து மற்றும் ஐயர்லாந்து நாட்டின் ராணியாக இருந்தவர் விக்டோரியா ரெஜினா. இவர் ராணியாக பதவி வகிக்கும்போது பயன்படுத்திய உள்ளாடைகள் ஏலத்தில் விடப்படுவதாக இங்கிலாந்தின் பிரபல ஏல நிறுவனமான தி சிப்பன்ஹெம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து ராணியின் உள்ளாடைகளை வாங்க ஏல நிறுவனத்தில் கூட்டம் அலைமோதியது.
இறுதியாக 125 ஆண்டுகள் பழமையான இரண்டு ஜோடி உள்ளாடைகள் 12 ஆயிரம் பிரிட்டன் பவுன்டுக்கு ஏலம் போனது. இது இந்திய மதிப்பில் சுமார் 11 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறுத்து ஏல நிறுவன அதிகாரி ரிச்சர்டு எட்மன்ட்ஸ் கூறுகையில், ” ராணியின் உள்ளாடை 12 ஆயிரம் பவுன்டுக்கு விலை போனது புதிய சாதனை.” 125 ஆண்டுகள் பழமையான இந்த உள்ளாடை ஏல நிறுவனத்திற்கு கிடைத்த பிறகு குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உள்ளாடைய ஏலம் எடுத்தவர் குறித்த விவரங்களை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்