நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காந்திமதியம்பாள் உடனுறை நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுவதும் அனைத்து மாதங்களிலும் 1முக்கிய திருவிழாக்கள் நடக்கின்றன. ஆனித்தேரோட்டம் அண்மையில் விமரிசையாக நடந்தது. ஆடி மாதம் வரும் ஜூலை 17ல் துவங்குகிறது. ஆண்டுதோறும் ஆடிப்பூர திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர திருநாள் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரம் மற்றும் கும்பத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. கொடியேற்றத்தின்போது திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 4ம் திருநாளில் வரும் 14ம் தேதியன்று நண்பகல் 12 மணிக்கு அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு காந்திமதிஅம்பாள் சன்னதியில் இருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதியுலா நடக்கிறது. மொத்தம் பத்து நாட்கள் நடக்கும் இவ்விழாவில் நிறைவு விழாவில், ஆடிப்பூரம் 10ம் திருநாள் 20ம் தேதி இரவு ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஆடிப்பூரம் முளைக்கட்டு திருநாளும், சீமந்தம் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று காலை தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.