உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும், முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாசன் விஜய்யுடன் ‘புலி’ மற்றும் அஜீத்துடன் ‘தல 56’ ஆகிய படங்களில் நடித்து ஒரே நேரத்தில் இரு மாஸ் நடிகர்களுக்கு ஜோடியாகி சாதனை படைத்துள்ளார்.
அஜீத், விஜய் ஆகிய இரண்டு மாஸ் நடிகர்களின் படங்களிலும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தாலும், விஜய்யுடன் நடித்த புலி’ படம் குறித்து அவர் தனது பேட்டியிலும் சரி, டுவிட்டரிலும் சரி பெரிதாக கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் அஜீத்துடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே தனது டுவிட்டரில் அஜீத் புராணத்தை அவர் பாட ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இன்று காலை அஜீத் குறித்து குறிப்பிட்டுள்ள ஸ்ருதிஹாசன், என்னுடைய பேவரிட் நடிகர்களில் அஜீத்தும் ஒருவர். அவருடைய சமையல் திறன், போட்டோகிராபி மற்றும் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது கிடைத்த தகவல்கள் ஆகியவை என்னை ஆச்சரியப்படுத்தியது’ என்று கூறியுள்ளார்.
ஸ்ருதிஹாசனின் இந்த டுவீட், விஜய் ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. டுவிட்டரில் உள்ள ஒருவர், நீங்கள் உண்மையிலேயே கமலுக்கு பிறந்திருந்தால், ‘புலி’ படத்தை பற்றி டுவீட் செய்யுங்கள். இல்லாவிட்டால் உங்கள் பிறப்பை சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்’ என்று கூறியுள்ளார். அநாகரீகமாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த டுவீட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.