சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை வழக்கு தள்ளுபடி. தென்மாநில மக்கள் அதிர்ச்சி

சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை வழக்கு தள்ளுபடி. தென்மாநில மக்கள் அதிர்ச்சி

Homosexuality is illegal - Supreme Courtசென்னை மக்கள் மிகவும் எதிர்பார்த்த விஷயங்கள் இரண்டு. ஒன்று மெட்ரோ ரயில், இரண்டாவது சுப்ரீம் கோர்ட்டின் கிளை. இவற்றில் மெட்ரோ ரயில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, சுப்ரீம் கோர்ட்டின் கிளை சென்னையில் அமைக்கப்படுமா? என்பது குறித்த வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ஆனால் சென்னை மக்களின் கனவை பொய்யாக்கும் வகையில் இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

நீதித்துறையின் தலைமை நீதிமன்றமான சுப்ரீம் கோர்ட்டு, தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளதால், இந்தியாவின் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு போன்ற தொலைதூர பகுதிகளில் உள்ளவர்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவதில் சிரமம் இருப்பதால்,  நாட்டின் முக்கியமான நகரங்களில் சுப்ரீம் கோர்ட்டு கிளைகளை அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஏ.எம்.கிருஷ்ணா என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கை தாக்கல் செய்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

இந்திய அரசியல் சட்டப்படி நீதி வசதி என்பது முக்கியமான மனித உரிமையாகும். ஆனால், ஒரு வழக்குக்காக தமிழ்நாடு, குஜராத், அசாம் போன்ற தொலைதூர மாநிலங்களை சேர்ந்த ஒருவர், சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது மிகவும் சிரமத்துக்குரியதாக உள்ளது.

அந்த பகுதிகளில் இருந்து டெல்லிக்கு வரும் போக்குவரத்து செலவு, தங்கும் வசதி போன்ற செலவுகளால் நீதியை பெறுவதற்கு மிகப்பெரும் செலவினம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்ட சுப்ரீம் கோர்ட்டும், அதன் கிளைகளை தெற்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு மண்டலங்களில் அமைக்க பரிந்துரைத்துள்ளது.

மேலும் சுப்ரீம் கோர்ட்டில் தேங்கும் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது நம்மைப்போன்ற உண்மையான ஜனநாயக நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. எனவே நீதித்துறையை பல வழிகளில் விரிவுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

எனவே சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை ஒன்றை நிறுவுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை உடனே தொடங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இது வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கறிஞர் ஏ.எம்.கிருஷ்ணாவின் பொதுநல மனுவை தள்ளுபடி செய்வதாக இன்று சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இதனால் சென்னைக்கு சுப்ரீம் கோர்ட் இப்போதைக்கு வர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

Leave a Reply