பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்.

msv
எம்.ஜி.ஆர்-சிவாஜி படங்கள் உள்பட சுமார் 1200 படங்களுக்கும் மேல் இசையமைத்த கடந்த பல வருடங்களாக கோலிவுட் திரையுலகின் முடிசூடா இசைச்சக்கரவர்த்தியாக வாழ்ந்து வந்த மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், இன்று அதிகாலை காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை 4.30 மணிக்கு மரணம் அடைந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது உடல் சென்னை  சாந்தோமில் உள்ள இல்லத்தில்  வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை பெசண்ட் நகர் மின்சார இடுகாட்டில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு வார காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சைக்கு பலனளிக்காமல் இன்று அதிகாலை மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவிற்கு இந்திய மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் நம்மை விட்டு மறைந்தாலும், அவரது இசை நம்மிடையே ஒலித்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உண்மை. அவரது ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.

Leave a Reply