பாகுபலி’ பிரமாண்டத்திற்கு ஈடு கொடுக்குமா புலி?
இந்திய திரையுலகின் மிகப்பெரிய பட்ஜெட் படமான பாகுபாலி’ மாபெரும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி இந்தியாவில் இதுவரை எந்த படமும் செய்யாத வசூலை குவித்து மாபெரும் சாதனையை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி பல இயக்குனர்களை யோசிக்க வைத்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சீசன்கள் கோலிவுட் திரையுலகில் தோன்றுவதுபோல், இனிமேல் பிரமாண்டமான படங்களின் சீசன் ஆரம்பித்துவிடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பாகுபலி’ படத்தின் இடைவெளியில் போடப்பட்ட விஜய்யின் புலி’ படத்தின் டீசரை பார்த்த பலர், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மிகப்பெரிய அளவில் இருப்பதாக கமெண்ட் அளித்துள்ளனர். இதுவரை விஜய்யின் டீசருக்கு இருந்த வரவேற்பிற்கும், பாகுபலி படத்தின் ரிலீஸுக்கு பின்னர் ‘புலி’ படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பிற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை தியேட்டரில் காண முடிகிறது. பாகுபலி’ பிரமாண்டத்தை பார்த்துவிட்டு, புலி படத்தின் டீசரை பார்த்தால் யானைக்கும் பூனைக்கும் உள்ள வித்தியாசம் தெரிவதாக பலர் கமெண்ட் அடிக்கின்றனர்.
இந்த தகவல் வெளிவந்துள்ளதால் ‘புலி’ படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்துவிட்டாலும், இன்னும் ஒருசில கோடிகளை செலவு செய்து கிராபிக்ஸில் பிரமாண்டத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.