இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு திடீர் நெருக்கடி?

இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு திடீர் நெருக்கடி?

studentsஇங்கிலாந்து நாட்டுக்கு கல்வி கற்க செல்லும் இந்திய மாணவர்கள் உள்பட வெளிநாட்டு மாணவர்கள் அங்கு கல்வி கற்றுக்கொண்டே பகுதி நேரமாக வேலை செய்து வந்தனர். இதன் மூலம் தங்களுடைய கல்விச் செலவே அவர்களே பார்த்து கொண்டனர். ஆனால் அதற்கு தற்போது இங்கிலாந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரவுள்ளதாக இங்கிலாந்து குடியுரிமை அமைச்சர் ஜேம்ஸ் புரோகன்ஷிர் கூறியுள்ளார். அவர் மேலும் செய்தியாளர்களிடம் கூறியபோது, “ஐரோப்பிய யூனியன் நாடுகள் அல்லாது வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பகுதி நேரம் பணிபுரியும் உரிமையை இழக்கிறார்கள்.

ஏனெனில் இச்சலுகையை பயன்படுத்தி குடியுரிமை குற்றத்தில் ஈடுபடுபவர்கள் இங்கிலாந்தில் உள்ள வேலை வாய்ப்புகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகிறார்கள். அதை ஏராளமானவர்கள் வாங்கி பயன்பெறுகிறார்கள். எனவே, ஐரோப்பிய யூனியன் நாடுகள் இன்றி பிற வெளிநாடுகளில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவில் சீரமைப்பு செய்யப்படுகிறது. அதன்படி கல்வி பயில வருபவர்களுக்கு ஆங்கில மொழி தேர்வு மற்றும் நூற்றுக்கணக்கான போலி கல்லூரிகளின் ‘ஸ்பான்சர் ஷிப்’ உரிமைகள் நீக்கம், பகுதிநேர வேலைவாய்ப்பு பெறும் மாணவர்களின் விகிதம் குறைப்பு போன்றவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. அதன் மூலம் இங்கிலாந்தில் இது போன்று குடியேறுபவர்களின் சலுகைகள் கட்டுப்படுத்தப்படும் என்றார்.

வெளிநாட்டு மாணவர்கள் பகுதிநேரம் பணிபுரிய தடை விதிப்பது மட்டுமின்றி அவர்கள் படித்து முடித்த பிறகு மேலும் இங்கு தொடர்ந்து தங்க விசாவுக்கு விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்று கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் இந்திய மாணவர்களே அதிகம் என்பதால் இந்தியாவில் சென்ற மாணவர்கள் பெருமளவில் பாதிப்பு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இங்கிலாந்துக்கு கடந்த ஆண்டு வெளிநாட்டு மாணவர்கள் 1 லட்சத்து 21 ஆயிரம் பேர் வந்தனர். அவர்களில் 51 ஆயிரம் பேர் மட்டுமே வெளியேறியுள்ளனர் என இங்கிலாந்து உள்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply