ஜிம்பாவேவுக்கு எதிரான 3வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி.

ஜிம்பாவேவுக்கு எதிரான 3வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி.

cricket 100இந்தியா மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றிய நிலையில் நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டி இரு அணிகளுக்கிடையே ஹராரே நகரில் நடைபெற்றது.  இந்த போட்டியில் இந்திய அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஜிம்பாவே அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டதை அடுத்து முதலில் களமிறங்கிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் மிக அபாரமாக விளையாடி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் ஜாதவ் 105 ரன்களும், பாண்டே 71 ரன்களும் எடுத்தனர்.

277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாவே அணி 42.4 ஓவர்களில் 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து படுதோல்வி அடைந்தது. இந்திய அணியின் பின்னி 3 விக்கெட்டுக்களையும் ஷர்மா, ஹர்பஜன் சிங் மற்றும் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். ஜாதவ் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

Leave a Reply