தமிழகம் முழுவதும் உள்ள 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு கட்ஆப் மதிப்பெண் வெளியீடு

images (2)

சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள ஐந்தாண்டு சட்டப்படிப்புகளுக்கான கட்ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 7 அரசு சட்டக் கல்லூரிகள், 1 தனியார் சட்டக் கல்லூரி மற்றும் சட்டப்பல்கலையில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளி ஆகிய 9 கல்லூரிகள் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் வருகிறது. இதில், 5 ஆண்டு பிஏஎல்எல்பி படிப்பின் கீழ் 1052 இடங்களும், 3 ஆண்டு எல்எல்பி படிப்பின் கீழ் 1262 இடங்களும், சீர்மிகு சட்டப்பள்ளியில் 660 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கான 2015-16் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. அதன்படி, சட்டபல்கலைக்கழகத்தில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளியில் உள்ள 5 ஆண்டு (ஹானர்ஸ்) பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு ஜூன் 5ம் தேதி முதல் 22ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஜூன் 25ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளியில் உள்ள பிஏ எல்எல்பி, பிசிஏ எல்எல்பி, பிகாம் எல்எல்பி, பிபிஏ எல்எல்பி உள்ளிட்ட 5 ஆண்டு ஹானர்ஸ் படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் மற்றும் கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. அதேபோல, சட்டக்கல்லூரிகளில் உள்ள 5 ஆண்டு பாடப்பிரிவுகளுக்கு ஜூன் 8ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கி, ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து நேற்று மாலை தமிழக சட்டக்கல்லூரிகளில் உள்ள 5 ஆண்டு பாடப்பிரிவுகளுக்கான ரேங்க் பட்டியல் மற்றும் கட்-ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டது. தரவரிசை பட்டியல் பல்கலைக்கழக நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது. மேலும், இதனை பல்கலைக்கழக இணையதளமான www.tandalu.ac.in னை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

5 ஆண்டு படிப்பு கட்-ஆப்

தமிழகம் முழுவதும் உள்ள 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்-ஆப் மதிப்பெண்களின் விவரம்: ஓசி-89.875, எஸ்டி – 65.875, எஸ்சி அருந்ததியர் – 79.375, எஸ்சி மற்றவை – 80.000, எம்பிசி மற்றும் டிஎன்சி – 79.875, பிசி முஸ்லிம் – 77.000, பிசி மற்றவை – 81.250.

Leave a Reply