நவீன மருத்துவ படிப்புகளுக்கு முது நிலை பட்டப்படிப்பு தேர்வுகளை உயர் தரத்தில் தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தி வருகிறது. இந்த வாரியத்தில் காலியாக உள்ள 15 ஜூனியர் அசி்ஸ்டென்ட் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப் பிக்கலாம்.
பணி:
ஜூனியர் அசிஸ்டென்ட்
15 இடங்கள் ( பொது-10, ஒபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.
வயது:
18 முதல் 27க்குள்.
கல்வித்தகுதி:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. கம்ப்யூட்டரில் எம்எஸ் வேர்டு, எக்சல், பவர் பாயின்ட், அவுட்லுக் உள்ளிட்ட கம்ப்யூட்டர் பயன்பாடுகளை கையாள தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்புக்கு பின்னர் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
விண்ணப்ப கட்டணம்:
பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.200 (எஸ்சி.,எஸ்டியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100). இதை National Board of Examinations என்ற பெயருக்கு புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுக்க வேண்டும். டிடியின் பின்னால் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை பெயர், செல்போன் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.natboard.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Deputy Director (ADMN.),
National Board of Examinations,
Medical Enclave, Ansari Nagar,
Ring Road, NEWDELHI -110 029.
விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 17.08.2015.