ஆப்பிள் நிறுவனம் ஐபாட் ப்ளஸ் என்று அழைக்கப்படும் பெரிய ஐபாட்டை நவம்பர் மாதத்தில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் 6 ப்ளஸ் காட்டிலும் இந்த ஐபாட்டின் ஸ்கிரீன் மிக பெரியதாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் அழுத்த உணர்திறன் உடன் அனைத்து புதிய ப்ளூடூத் ஸ்டைலஸ் அக்செசரீஸ் மற்றும் புதிய அழுத்த உணர்திறன் ஸ்கிரீன் ஆகியவை இதில் உள்ளடங்கும் என்று நம்பப்படுகிறது.
12.6 இன்ச் பெரிய டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் ஐபாட் ப்ரோ செப்டம்பர் மாதம் பிற்பகுதியில் அதன் பாகங்களை வெளியிடும் என்றும், நவம்பர் மாத மத்தியில் இது சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 12.6 இன்ச் புதிய ஐபாட் உடன் NFC ரேடியோ இடம்பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய திரை கொண்ட ஆப்பிள் ஐபாட் ப்ரோ டேப்லட்டை இந்த வருட இறுதியில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.
NFC உள்ளடக்கியுள்ளதால் இதில் டேப் டூ ப்ளே செயல்பாடு கொண்டு எளிதாக ஆப்பிள் பே மூலம் பணம் செலுத்தலாம். ஆப்பிள் ஐபாட் ப்ரோ டேப்லட்டில் யூஎஸ்பி-சி இன்புட் இருப்பதால் இதில் புதிய செகன்ட் போர்ட் ஆப்ஷனாக இருக்கும், அல்லது பழைய ஐபாட்டில் உள்ள லைட்னிங் கனெக்டருக்கு பதிலாக இந்த புதிய யூஎஸ்பி-சி இன்புட் செயல்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.