பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அனைத்து மாநில முதல்வர்களின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ள உள்ள நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்த கூட்டத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியாத நிலை குறித்து விளக்கம் தெரிவிக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
முக்கிய அலுவல் காரணமாக நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று தெரிவித்துள்ள முதல்வர், முதல்வர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என கூறியதால் பன்னீர்செல்வமும் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்று தனது கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிலம் கையக சட்டத்திருத்த மசோதாவின் 3-வது பிரிவிலுள்ள அம்சங்களை ஏற்க முடியாது என்று கூறியுள்ள ஜெயலலிதா, சில சட்ட திருத்தங்கள் விவசாயிகள் நலன்களுக்கு எதிராக உள்ளது என்றும், எதிர்ப்புக்குரிய சட்டத்திருத்தங்களை மத்திய அரசு நிறைவேற்றக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.