திருப்பதியில் பிரபல நடிகையுடன் பாபிசிம்ஹா ரகசிய திருமணம்?

திருப்பதியில் பிரபல நடிகையுடன் பாபிசிம்ஹா ரகசிய திருமணம்?

reshmiகார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹா, தற்போது ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, மசாலாபடம், உறுமீன், பாம்புச்சட்டை, இறவி, கவலை வெண்டாம், பெங்களூர் டேய்ஸ் தமிழ் ரீமேக், கோ 2 ஆகிய எட்டு படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக மாறிவிட்ட பாபிசிம்ஹா, தற்போது காதலிலும் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.

உறுமீன் படத்தில் பாபிசிம்ஹாவுடன் இணைந்து நடிக்கும் நடிகை ரேஷ்மா மேனனை அவர் காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த காதல் விவகாரம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு தெரியும் என்றும், அவருடைய தலைமையில்தான் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்  இதுகுறித்து பாபிசிம்ஹா கூறியதாவது: எனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. ரேஷ்மி மேனனுடன் நட்பாகத்தான் பழகுகிறேன் எங்களுக்குள் காதல் இல்லை. ரேஷ்மியை திருமணம் செய்யப்போவதாக வந்த செய்தியில் உண்மை இல்லை, வதந்திதான் என்று கூறியுள்ளார்.

Leave a Reply