மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு வரும் 30ஆம் தேதி தூக்கு?

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு வரும் 30ஆம் தேதி தூக்கு?

yakub menonகடந்த 1993ஆம் ஆண்டு இந்தியாவையே நடுநடுங்க செய்த சம்பவம் மும்பை தொடர் வெடிகுண்டு வெடிப்பு. 257 பேர் பலியான இந்த சம்பவத்தின் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி யாகூப் மேமனுக்கு வரும் 30ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாகூப் மேமனுக்கு அதே சிறையிலேயே தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதாக பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, அதில் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளிகளான தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் ஆகிய இருவரும் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். டைகர் மேமனின் தம்பி யாகூப் மேமன் உள்பட 12 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. யாகூப் மேமனின் தூக்கு தண்டனை சுப்ரீம் கோர்ட்டிலும் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துவிட்டதால், விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அனேகமாக அவருக்கு வரும் 30-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply