பிசியான சாலையின் நடுவே விமானத்தை இறக்கிய பள்ளி மாணவர்கள். அதிர்ச்சி வீடியோ
அமெரிக்காவில் போக்குவரத்து மிகுந்த சாலை ஒன்றில் பல வாகனங்கள் பிசியாக சென்று கொண்டிருந்தபோது சிறிய ரக விமானம் ஒன்று சாலையின் நடுவில் தரையிறங்கிய சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூசெர்சி மாகாணத்தில் ஸ்டாபோர்ட் நகரில் உள்ள மிகவும் போக்குவரத்து மிகுந்த சாலை ஒன்றின் மைய பகுதியில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்த போது, திடீரென சிறிய விமானம் ஒன்று சாலையின் நடுவில் தரையிறங்கி ஓடத்தொடங்கியது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் அனைவரும் பயந்து அலறி தங்களது காரை சாலையோரமாக திருப்பிச் சென்றனர். இதை பார்த்த விமானி விமானத்தை சாலையின் மையத்தில் இருந்த புல்வெளிக்கு திருப்பினார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் விமானத்தின் இறக்கையில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஸ்டாப்போர்ட் நகர காவல்துறையினர் கூறுகையில், “சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானத்தை கிழக்கு கடற்கரை ஸ்கை டைவிங் பள்ளி மாணவர்கள் ஓட்டி வந்துள்ளனர். திடீரென என்ஜின் சக்தி இழந்ததால் பைலட் விமானத்தை அவசரமாக தரை இறக்கி உள்ளார். அந்த விமானத்தில் 5 பேர் இருந்துள்ளனர். விமானம் சாலையில் இறங்கியது தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.
https://www.youtube.com/watch?v=WAw4w7Zl71U