தனியார் நிலத்தை கையகப்படுத்தி, போரூர் ஏரியை மேம்படுத்த வேண்டும். விஜயகாந்த்

தனியார் நிலத்தை கையகப்படுத்தி, போரூர் ஏரியை மேம்படுத்த வேண்டும். விஜயகாந்த்

porurபோரூர் ஏரியை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து நீர் நிலையை பாதுகாக்க வேண்டும் என்றும், ஏரியின் மேம்பாட்டிற்காக தனியாரிடமிருந்து நிலத்தை மீட்டு பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கவேண்டுமென தேமுதிக தலைவர் விஜய்காந்த் இன்று விடுத்த ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

போரூர் ஏரி நிலம் குறித்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், தேமுதிகவும் எவ்வளவோ எடுத்துக்கூறியும் தனியாருக்கு ஆதரவாக தொடர்ந்து அங்கே பணிகள் நடைபெற்று வருவது தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் வாயிலாக தெரியவருகிறது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போரூர் ஏரியின் பயன்பாட்டிலுள்ள நிலத்தை, தனியாருக்கு விட்டுக் கொடுக்க அதிமுக அரசுக்கு என்ன நிர்பந்தமோ? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தனியாருக்கு உரியநிலம் என்றாலும்கூட நீர்நிலைகளின் மேம்பாட்டிற்காக அரசு கையகப்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் புதியதாக நீர்நிலைகளை உருவாக்க விவசாய நிலங்களை, விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி கையகப்படுத்துகிற தமிழக அரசு, போரூர் ஏரியின் நிலத்தை தனியாரிடமிருந்து மீட்பதில் மட்டும் அக்கறை இல்லாமல், மெத்தனப்போக்கோடு ஏனோதானோவென ஏன் இந்த அரசு செயல்படுகிறது.

போரூர் ஏரியை இரண்டாக பிரிக்கும் வகையில் தாம்பரம்- மதுரவாயல் புறவழிச்சாலையை அமைத்தபோதே, அந்த நிலத்தை போரூர் எரியுடன் இணைக்கவேண்டுமென பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, போரூர் பேரூராட்சியின் பதினெட்டாவது வார்டாகவும், வீட்டுவரி செலுத்தப்பட்ட, மின்இணைப்புடன் கூடிய குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும் இருந்ததை போரூர்ஏரியின் நீர்பிடிப்புபகுதி என்ற காரணம்கூறி அப்புறப்படுத்தப்பட்டது. அதில் பல ஏழைக்குடும்பங்கள் வீடுகளையும், நிலங்களையும் இழந்து பாதிக்கப்பட்டனர். ஏழைகள் என்பதால் அவர்களின் குரல் அன்று எடுபடவில்லையா? இல்லை அரசின் காதில் விழவில்லையா? பணக்காரர் என்பதால் தனியாரிடமிருந்து நிலத்தை மீட்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தயங்குகிறாரோ? டெல்லிக்கு சென்று நதிகளை இணைக்கவேண்டும் என்று கூறும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு போரூர் ஏரியை மேம்படுத்த தனியார் நிலத்தை கையகப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் எழவில்லையா?

அதானி நிறுவனத்திடம் சுமார் 7 ரூபாய் என அதிக விலைகொடுத்து சூரியசக்தி மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்ச்சிக்காகவும், ஏதோ ஒரு நிர்பந்தம் காரணமாக இன்று தலைமை செயலகத்திற்கு நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, போரூர் ஏரியை நேரில் பார்வையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும். தனியாரிடமிருந்து நிலத்தைமீட்டு போரூர் ஏரியின் மேம்பாட்டிற்காக பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்

Leave a Reply