தொடரை வென்று சரித்திர சாதனை செய்தது வங்கதேசம். தென்னாப்பிரிக்கா பரிதாபம்

தொடரை வென்று சரித்திர சாதனை செய்தது வங்கதேசம். தென்னாப்பிரிக்கா பரிதாபம்

bangladeshதென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் நாடுகளுக்கு இடையே மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று சிட்டகாங் நகரில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. வங்கதேச பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாத தென்னாப்பிரிக்க அணி 15 ஓவர்களில் 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. மேலும் ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட்டதால், போட்டி 40 ஓவராக குறைக்கப்பட்டது. 40 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணீ 9 விக்கெட்டுக்களை இழந்து 168 ரன்கள் எடுத்தது.

டக்வொர்த் லீவீஸ் முறைப்படி வங்கதேச அணிக்கு 40 ஓவர்களில் 170 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் வங்கதேச அணி இந்த இலக்கை வெறும் 26.1 ஓவர்களில் அடைந்தது. சவும்யா சர்கார் 90 ரன்களும், தமீம் இக்பால் 61 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் தொடரை வென்று வங்கதேச அணி சரித்திர சாதனை புரிந்துள்ளது. சவும்யா சர்கார் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Leave a Reply