சென்னை: சி.ஏ., என் சார்ட்டட் அக்கவுன்டன்ட் படிப்புக்கான, சி.பி.டி., என்ற தகுதித் தேர்வு மற்றும் சி.ஏ., தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டு உள்ளன.
சி.ஏ., படிக்க வேண்டுமென்றால் பிளஸ் 2 முடித்த பின் சி.பி.டி., என்ற பொது தகுதித் தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வு ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பரில் நடக்கும். இதேபோல் சி.ஏ.,
படிப்புக்கான தேர்வுகள், மே மற்றும் நவம்பரில் நடக்கும்.இந்த தேர்வுகளுக்கான முடிவுகளை நேற்று இந்திய சார்ட்டட் அக்கவுன்டன்ட் அமைப்பு வெளியிட்டது.
சி.ஏ., தேர்வில், டில்லி மற்றும் செகந்திராபாத் நகரைச் சேர்ந்த இரண்டு பேர், 75.75 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் 42,847 பேர் எழுதியதில் 8.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் சி.பி.டி.,தகுதித் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.
இந்தத் தேர்வு முடிவுகளை http:/caresults.nic.in/cpt/cpt_roll.asp என்ற இணைய தள இணைப்பில் தங்கள் பதிவு எண் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம்.